புக்கிட் மெர்தாஜாம் கோயிலுக்கும் மருத்துவமனைக்கும் பாதிப்பில்லை! மருத்துவமனை வாரியம் விளக்கம்!
- THINAGAREN SANGGAREN
- 24 Mar, 2026
மார்ச் 24,
பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை வாசலில் அமைந்திருக்கும் Sri Dewi Muniswarar கோயில் குறித்து அவதூறுகளைப் பரப்பிய கும்பல் தற்போது அமைச்சரும் பினாங்கு மாநில டி.ஏ.பி தலைவருமான STEVEN SIM கோயிலைத் தற்காப்பதற்காக BUKIT MERTAJAM மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யவிருப்பதாகத் தவறான கருத்துகளைப் பரப்பியதால் மருத்துவமனையின் வாரியக் குழு விளக்கம் அளித்ததுடன் மருத்துவமனை தொடர்பாகச் சர்ச்சையான கருத்துகளை வெளியிட்ட நபருக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
அண்மையில் Hamly Hadi எனும் முகநூல் கணக்கில் கோயிலைப் பாதுகாப்பதற்காக மருத்துவமனையை இடமாற்றம் செய்வதற்கானப் பணிகளை STEVEN SIM முன்னெடுத்துள்ளதாக ஒரு செய்தி பரப்பப்பட்டதாகவும் அப்படியான எந்தவொரு நடவடிக்கையையும் மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையின் வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் Ng Yi Cheah விளக்கம் அளித்தார்.
இந்த ஒரு பதிவால் சமூக மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கிய சம்மந்தப்பட்ட நபருக்கு எதிராக மத்திய Seberang Perai காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையின் வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் Ng Yi Cheah தெரிவித்தார். புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கடந்த 2023 அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த DATUK DR ZALIHA MUSTAFA புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையை விரிவுப்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்கியதாகவும் பினாங்கு மாநில அரசு மருத்துவமனைக்குப் புதிதாக 8 ஏக்கர் நிலம் வழங்கியதாகவும், அந்த 8 ஏக்கர் நிலத்தில் தற்போது புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு இணை கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையின் வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் Ng Yi Cheah விளக்கம் அளித்தார்.
மருத்துவமனை என்பது இனம், மதம் கடந்து அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும் ஒரு பொது நிறுவனம். பொதுமக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளைத் திசைதிருப்ப வேண்டாம் என்றும் இது கட்டிடப் பணிகளுக்கு முட்டுக்கடையாக அமையும் என்பதால் இது போன்ற இன மத விவகாரங்களைத் தூண்டும் வகையிலான பதிவுகளையும் பொய்யான செய்திகளையும் வெளியிட வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



