பெண்கள் கழிப்பறையில் மாணவி பகடிவதை! காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 22 Jun, 2025
ஜுன் 22,
கழிப்பறையில் கூட்டமாகப் பெண் மாணவிகள் சேர்ந்து சக மாணவியைப் பகடிவதை செய்யும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட பள்ளி மாணவிகளை விசாரித்து வருவதாக வடக்கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S Vijaya Rao தெரிவித்தார். பகடிவதையின் போது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களிடமிருந்து இன்று நண்பகல் 12.53 மணிக்குப் புகார் கிடைக்க பெற்றதாகவும் S Vijaya Rao தெரிவித்தார்.
சமூக வலைத்தலத்தி பரவிய காணொலியில் பாதிக்கப்பட்ட மாணவியை 8 பேர் கொண்ட சக மாணவிகள் கன்னத்திலும் முதுகிலும் தாக்கும்படியாக அமைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக வடக்கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S Vijaya Rao தெரிவித்தார். இதில் சம்மந்தப்பட்ட அனைவரும் பெண் மாணவிகள் என்றும் கிள்ளானில் உள்ள ஒரு தேசிய பள்ளியின் பெண்கள் கழிப்பறையில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும் பகடிவதையில் ஈடுப்பட்ட பெண் மாணவிகளின் பெற்றோர்கள் சம்மதத்துடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வடக்கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S Vijaya Rao தெரிவித்தார்.
Satu video buli melibatkan pelajar perempuan di tandas sekolah di Klang tular di media sosial. Polis sedang menyiasat insiden selepas menerima laporan daripada ibu bapa mangsa. Lapan pelajar dikenal pasti terlibat dalam kejadian tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *