பள்ளிகளில் அதிகரிக்கும் குற்றச்செயல்களைத் தடுக்க இஸ்லாமிய போதனை ஒரே தீர்வு! பாஸ் கட்சி நம்பிக்கை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 19,

பள்ளிகளில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களைத் தடுக்க இஸ்லாமியப் போதனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் Afnan Hamimi Taib தெரிவித்துள்ளார். மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் முன்னர் அவர்களுக்கு இஸ்லாமிய இறை நம்பிக்கைகள் மீது பயம் ஏற்பட வேண்டும். அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பார் என்கிற பயம் இருந்தால் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என Afnan Hamimi Taib தெரிவித்தார். 

தலைவர்கள், மக்கள், சட்டங்கள், சுற்றுச்சூழல், வீடுகள், சமூக ஊடகங்கள், பள்ளிகளில் கற்றல் கற்பித்தல், என அனைத்தும் இஸ்லாமிய முறைப்படி மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என பெரிக்காத்தானின் நாடாளுமன்ற உறுப்பினருமான Afnan Hamimi Taib கல்வி அமைச்சுக்கு வலியுறுத்தினார். தொடர்ந்து பள்ளிகளில் ஏற்பட்டு வரும் இது போன்ற குற்றச்செயல்கள் இஸ்லாத்தை மீறிய ஒரு சிலரால் ஏற்படும் எதிர்வினைகள் என்றும் இஸ்லாத்தைப் பரப்பினால் மட்டுமே பள்ளிகளில் குற்றச் செயல்கள் தடுக்கப்படும் என Afnan Hamimi Taib தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *