பெர்சத்துவுடன் உறவாடும் ம.இ.கா! அரசாங்கத்திற்கு ஆபத்து! – புந்தோங் துள்சி காட்டம்!
- Thinagaren Sanggaren
- 08 Sep, 2025
செப்டம்பர் 8,
பெர்சத்துவில் பேராளர் ஆண்டுக் கூட்டத்தில் ம.இ.கா பங்கேற்றிருப்பது ஒற்றுமை அரசாங்கத்தில் ம.இ.கா மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிருப்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தெரிவித்தார். பகலில் பாரிசானுடனும் இரவில் பெரிக்காத்தானுடனும் ம.இ.கா உறவுக் கொள்வது ஆபத்தான அரசியல் என துளசி தெரிவித்தார். பாரிசான் தலைமையுடனானக் கூட்டத்தில் ம.இ.கா அமைதியாக இருப்பதாகவும் வெளியில் கூச்சலிடுவதாகவும் பாரிசான் துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்திருக்கிறார். அப்படியானால் ம.இ.கா போலி முகமூடி அணிந்திருந்து அரசாங்கத்துடன் உறவாடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகத் துளசி மனோகரன் சாடினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளை விடவும் ம.இ.கா அதிகமாகப் பயனடைகிறது. உண்மையில் ம.இ.கா தேவையில்லாத விருந்தினர். ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தேவையில்லாத சுமை என துளசி மனோகரன் கடுமையாகச் சாடினார். இதே போலவே கடந்த காலங்களில் அமைச்சரவையில் ம.இ.கா இருந்தும் எந்தவொரு பயனும் இல்லை. அமைச்சரவையிலும் இத்தனை காலமாக ம.இ.கா அமைதியாகவே இருந்துவிட்டு வெளியே வந்து நாங்கள் தான் இந்திய சமூகத்தின் தலைவர்கள் என பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் சாடினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



