பிரதமரின் 10 ஆண்டுகால பதவிக்காலம் முன்மொழிவு – தைரியமான, பொறுப்பான அரசியல் மாற்றத்தின் அறிகுறி
- Tamil Malar (Reporter)
- 06 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 6-
பிஏகேஆர் மகளிர் பிரிவு தொடர்புக்குழு தலைவர் டத்தோ கினி லிம், மலேசியாவின் முன்னேற்றத்துக்காக வெளிப்படையான, முற்போக்கான, ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் பிரதமரின் பதிவிக்காலத்தை 10 ஆண்டுகள் மட்டும் உறுதிபடுத்தும் முன்மொழிவை வரவேற்றுப் பேசினார்.
“அன்வார் 30 ஆண்டுகளுக்கும் மேல் எதிர்க்கட்சியாக போராடிய பின், ஆட்சியில் வந்தவுடன் சீர்திருத்த வாக்குறுதிகளை விரைவாக செயல்படுத்துகிறார். இந்நிலை உண்மையான மாற்றத்தை நிரூபிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
அன்வாரின் மூன்று ஆண்டு ஆட்சியில், ஒற்றுமை அரசு அரசியல் நிலைத்தன்மையை காத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, மக்களின் நலனைப் பேணியுள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்த சீர்திருத்தங்கள் நாட்டை மேம்படுத்தும்,” என்று கினி லிம் வலியுறுத்தினார். பிரதமரின் இந்த முன்மொழிவு, பாராளுமன்றத்தில் இந்த ஆண்டு RUU ஆக தொடர்புக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



