நான் ஸாராவின் பெயரைச் சொல்லி அவள் கன்னத்தில் தட்டினேன்-ஆனால் பதில் இல்லை!
- Muthu Kumar
- 13 Sep, 2025
கோத்தா கினபாலு, செப். 13-
நான் ஸாராவின் பெயரைச் சொல்லி அவள் கன்னத்தில் தட்டினேன். ஆனால் எந்த பதிலும் இல்லை என பள்ளி தங்கும் விடுதியின் 65 வயதான லினா மன்சோடிங் ஜலேஹா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மறைந்த ஸாரா கைரினா சம்பந்தப்பட்ட சம்பவம் நடந்த இரவில் நான் பணியில் இருந்தேன். அப்போது அந்த இளம் பெண்ணின் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு தட்டி அவரது பெயரைச் சொல்லி எழுப்ப முயற்சித்தேன்.ஆனால் பாதிக்கப்பட்டவர் பதிலளிக்கவில்லை. மேலும் பாதிக்கப்பட்டவர் குறட்டை விடுவது போல் வேகமாக சுவாசித்துக் கொண்டிருந்தார்.
ஸாரா மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் ஏழாவது நாளில்,ஸாரா கைரினாவின் குடும்ப வழக்கறிஞர் ஷாஹ்லான் ஜூஃப்ரியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நான்கு குழந்தைகளின் தாயான அவர் இவ்வாறு கூறினார்.அவர் குறட்டை விட்டு தூங்குவது போல் தோன்றியது.அவர் மல்லாந்து படுத்திருந்தார்.
நான் அவருக்காக வருந்துகிறேன் என்று மரண விசாரணை அதிகாரி அமீர் ஷா அமீர் ஹாசன் முன் சோகமான தொனியில் ஷாஹ்லானின் கேள்விக்கு பதிலளித்த லினா கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



