தேர்தல் வேட்பாளர்களைப் பக்காத்தான் உறுதிச் செய்யும்!
- THINAGAREN SANGGAREN
- 17 Apr, 2026
ஏப்ரல் 17,
அடுத்த பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்வதைப் பக்காத்தான் தலைமை பார்த்துக்கொள்ளும் என்றும் பொதுவெளிகளில் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து அரசியல் கட்சிகள், குறிப்பாக பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும் பக்காத்தான் கூட்டணியின் பொதுச் செயலாளர் Datuk Seri Saifuddin Nasution Ismail வலியுறுத்தினார். பக்காத்தானும் பாரிசானும் இணைந்து ஒற்றுமை கூட்டணியின் கீழ் அரசாங்கத்தை வழிநடத்தி வரும் தற்போதைய சூழலில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான எந்தவொரு முன்னேற்பாடுகளையும் இறுதிச் செய்ய முடியாது என அமைச்சருமான Datuk Seri Saifuddin Nasution Ismail தெளிவுப்படுத்தினார்.
இப்போது மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துங்கள். அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேருங்கள். அது தான் இப்போது நமக்கு இருக்கும் பொறுப்பு என Datuk Seri Saifuddin Nasution Ismail வலியுறுத்தினார். பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் அடுத்த பொதுத் தேர்தல் குறித்து இப்போதைக்குச் சிந்திக்க வேண்டாம் என்றும் தேர்தலுக்கானக் காலம் வரும் போது கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



