கம்போடியா-தாய்லாந்து போரில் அன்வாரைக் குரங்காக இழிவுப்படுத்திய பாஸ் கட்சி!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 29, 

கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்குமான எல்லை மீறல் தொடர்பான போர் நிறுத்தத்திற்கு பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதைப் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari கேலியாகப் பதிவிட்டிருப்பதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கம்போடியா பிரதமரும் தாய்லாந்து அதிபரும் நேற்று புத்ராஜெயாவில் பிரதமர் அன்வாரின் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

அன்வாரின் நீதிபதியாக இருந்து இருநாடுகளுக்கிடையில் அமைதி நிலவ வகை செய்திருந்த நிலையில் பாசீர் மாஸ் பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினரான Ahmad Fadhli Shaari கேலியாக இரு அடுகள் வாழைப்பழத்திற்குச் சண்டையிட்டுக் கொள்ளும்படியும் அதனைக் குரங்கு நீதிபதியாக இருந்து தீர்த்து வைக்கும்படியானக் கேலி சித்தரத்தைப் பதிவிட்டிருந்தார். அந்த கேலிச்சித்திரத்துடன் கம்போடியா தாய்லாந்து போரின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்புப் புகைப்படத்தையும் Ahmad Fadhli Shaari கேலியாகப் பதிவு செய்திருந்த நிலையில் அடுத்து சில நிமிடங்களிலேயே பலரும் எதிர்ப்புத் தெரிவித்ததும் அந்த பதிவை Ahmad Fadhli Shaari நீக்கியுமுள்ள நிலையில் Ahmad Fadhli Shaariயின் இச்செயலைக் கண்டித்து அமைச்சர்கள் அரசியல் செயலாளர்கள் பலரும் Ahmad Fadhli Shaari வெளிப்படையாகப் போரில் பாதிக்கப்பட்ட கம்போடியா தாய்லாந்து நாடுகளிடமும் அன்வாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *