எனக்கு இதுல அக்கறை இருக்கு; இது என்னோட கோயில்! மன்னிப்புக் கேட்கமாட்டேன்! - பப்பாராய்டு

top-news
FREE WEBSITE AD

ஷாஆலம், ஜன 9: பத்துமலை மின்படிக்கட்டுகள் அமைப்பது தொடர்பாக சரர்ச்சை எழுந்துள்ள நிலையில், நேற்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி தனது தரப்பு விளக்கத்தினை முன் வைத்தார்.

மின் படிக்கட்டு அமைப்பதில் தமக்கு எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. ஆனாலும், அது முறையாக அரசு அனுமதியுடன், சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் முறையாக தேசிய சங்கங்களின் பதிவிலாகாவான ROS in கீழ் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுதான் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு மன்றக் குழுவில் வரையறுக்கப்பட்ட விதிமுறை என்று அவர் கூறினார்.

மின் படிக்கட்டு அமைப்பதற்கான அனுமதி வழங்குவதில் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.  ஆனால் ஆலய நிர்வாகம் முறையாக ஓர் அமைப்பு  அல்லது ஓர் இயக்கத்தின் கீழ் பதிவு பெற்றிருப்பது மிகவும் அவசியம் என்று பாப்பாராய்டு தெளிவுபடுத்தினார்.

இதற்கு மத்தியில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, பப்பாராயுடு உண்மைக்குப் புறம்பான செய்தியைச் சொல்கிறார், அவதூறு பரப்புகிரார் என்றும், பத்துமலை திருத்தலம் தனிநபர் சொத்து அல்ல என்று நேற்று விளக்கமளித்து ஊடகவியாளர்கள் சந்திப்பை நடத்தியதோடு, பப்பாராயுடு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததோடு, சட்ட ரீதியான வழக்கை எதிர்கொள்வார் என்று தெரிவித்திருந்தார்,

இதற்குப் பதிலளித்தஹ் பப்பாராயுடு  எந்தவொரு அவதூறும் பரப்பவில்லை. நான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.

தேவஸ்தானம் சார்பிலான வழக்கைத் தாம் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும், அதை தமது வழக்கறிஞர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

எனது வழக்கறிஞர்கள் சட்ட ரீதியாக வழக்கை எதிர்கொள்வார் கள். ஆகவே அவரும் தேவஸ்தானமும் தொடுக்கும் வழக்கை சந்திக்க தயார் என்று அவர் சொன்னார்.

 தனக்கு வந்த முதல் பேப்பர் தனி நபர் பெயரில் வந்ததால்தான் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேனே தவிர, அதற்கு முன்னதாக அவர்கள் நிறுவனத்தின் பெயரில் போட்டார்களோ அல்லது யார் பெயரில் போட்டார்களோ தெரியாது. நான் பார்க்கவில்லை. அப்படிப் பார்த்தால் நான் கண்டிப்பாக சொல்லியிருப்பேன். எனக்கு வந்ததை வைத்துதான் நான் சொல்ல முடியுமே தவிர வராததை கற்பனையில் சொல்ல முடியாது என்று அவர் கூறினார்.

காலம் மாறிவிட்டது. காட்டு மிராண்டி காலத்தில் நாம் இல்லை. முறையான ஆர் ஓ எஸ் பதிவு இருந்தால் சிக்கல் இல்லை. இதுதான் நடைமுறை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *