RM 3 மில்லியன் மதிப்பிலான CASINO CHIPS மாயம்! – GENTING CASINO!
- Thinagaren Sanggaren
- 09 Aug, 2025
ஆகஸ்ட் 9,
மலேசியாவின் பிரபலச் சூதாட்ட மையமான கெந்திங் கேசினோவிலிருந்து 3 மில்லியன் மதிப்பிலான கேசினோ CHIPS-கள் மாயமாகியிருக்கும் வழக்கு தொடர்பாக ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் தேடி வருவதாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். 44 வயது உள்ளூர் ஆடவர் 3 மில்லியன் மதிப்பிலான கேசினோ CHIPS-களுடன் கெந்திங்கிலிருந்து வெளியேறியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தற்போது அவ்வாடவர் மலேசியாவை விட்டு வெளியேறியிருப்பதாகவும் சந்தேக நபரை Interpol உதவியுடன் கண்காணித்து வருவதாகவும் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
திருடப்பட்டதாக நம்பப்படும் 3 மில்லியன் மதிப்பிலான கேசினோ CHIPS-களுக்குக் கெந்திங்கைத் தவிர வெளி இடங்களில் பயன்படுத்த அனுமதியில்லை என்பதால் சம்மந்தப்பட்ட 44 வயது ஆடவரைக் காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும் அவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காகக் காவல்துறை காத்திருப்பதாகவும் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கேசினோ CHIPS-களைப் பணமாக்க மீண்டும் கெந்திங்கு அவர் வந்தாக வேண்டும் என்பதால் காவல்துறையினர் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



