துணை அமைச்சருடன் CCAM லாவணியா சந்திப்பு! குழந்தைகள் புற்றுநோய்க்கு முக்கிய தீர்வு!
- THINAGAREN SANGGAREN
- 11 May, 2026
மே 11,
மலேசிய குழந்தைகள் புற்றுநோய் நலச் சங்கத்தினர் தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் யுனேஸ்வருடன் சந்திப்பு நடத்தியதாகவும் முக்கிய சிறப்பு செயல்பாடுகள் குறித்து துணை அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டதாகவும் Children Cancer Association Malaysia (CCAM) தலைவர் லாவணியா கணபதி தெரிவித்தார். மலேசியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேசிய குழந்தைகள் புற்றுநோய் பதிவேட்டில் தரவுகள் இணைக்கபடவில்லை என்பதையும் லாவணியா கணபதி சுட்டிக்காட்டினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான வழிகாட்டுதலை மலேசிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு இந்த துல்லியமான தரவுகள் அவசியம் என்றும் துணை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதாக லாவணியா கணபதி தெரிவித்தார்.
மலேசியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் குணமடைவதற்கு 45% முதல் 55% வரையில் மட்டுமே சாத்தியம் உள்ளதாகவும் மேற்கத்திய நாடுகளில் 95% வரையில் சாத்தியங்கள் இருப்பதால் மலேசியாவில் குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக லாவணியா கணபதி தெரிவித்தார். மலேசியாவில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருந்தாலும் அவர்களை அணுகும் முறைகள், தாமதமான சிகிச்சை, பொருளாதாரச் சுமையுடன் பொது அமைப்புகளின் செயல்பாடுகளும் குறைவாக இருப்பதையும் துணை அமைச்சருக்கு வலியுறுத்தியதாக லாவணியா கணபதி தெரிவித்தார்.
குழந்தைகளுக்குப் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் அதற்கான முதற்கட்ட சிகிச்சைகளைப் பெற முயற்சித்தாலும் அதற்கான சூழல் தற்போது இல்லாததையும் லாவணியா கணபதி சுட்டிக்காட்டினார். ஆனால், Children Cancer Association Malaysia (CCAM) அமைப்பின் மூலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்குச் சிகிச்சைக்கான செலவுகளைச் செலுத்தியிருப்பதாகவும் விரைவில் புற்றுநோயிற்காகச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளையும் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளையும் இணைக்கும்படியான ஒரு வலைதலத்தைத் தொடங்கவிருப்பதாகவும் அதனுடன் சிகிச்சைக்கான செலவீனங்களை நன்கொடை அளிக்கவிரும்புவர்கள் சம்மந்தப்பட்ட வலைத்தலத்தின் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகப் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும், மருத்துவமனைக்கும் நன்கொடை அளிக்கும் முடியும் என லாவண்யா தெரிவித்தார். மேலும் பல அமைப்புகள் இது போல முன்வர வேண்டும் என்றும் Children Cancer Association Malaysia (CCAM) அமைப்பின் தலைவர் லாவணியா கணபதி கேட்டுக்கொண்டார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



