சபா, ஜாலான் குனாக்-தாவாவ் பகுதியில் விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
- Shan Siva
- 24 Nov, 2025
கோலாலம்பூர், நவ 24: : சபாவில் உள்ள ஜாலான் குனாக்-தாவாவ் பகுதியில் இன்று காலை 6 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
அதிகாலை 4.15 மணிக்கு பேரிடர் குறித்த தகவல் வந்ததையடுத்து,
அவசர சேவை உதவிப் பிரிவுடன் ஆறு தீயணைப்பு
வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக குனாக் தீயணைப்பு மற்றும்
மீட்பு நிலையத் தலைவர் முகமது ஒமர்பதா தெரிவித்தார்.
25 நிமிடங்களுக்குப் பிறகு
வந்த குழு, சரிவின் அடிப்பகுதியில்
வாகனத்தைக் கண்டுபிடித்ததாகவும், நான்கு பேர் உள்ளே சிக்கியிருந்ததாகவும்
தெரிவிக்கப்பட்டது.
ஹெர்டின் பாஸ்ரி என
அடையாளம் காணப்பட்ட நால்வரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அவர்
கூறினார்.
மற்ற மூவர் - இந்தோனேசிய
நாட்டைச் சேர்ந்த 39 வயது ரஹ்மான் சுலைமான், 35 வயது அலி கபரே மற்றும் 28 வயது ஹபீஸ் ஹாலிங் ஆகியோர் பலத்த
காயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக தாவாவ் மருத்துவமனை மற்றும் குனாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



