கிள்ளானில் விபத்து! - மோட்டார் சைக்கிளோட்டி பலி
- Shan Siva
- 17 Sep, 2025
கிள்ளான்: Jalan Batu Belahவில் நேற்று இரவு டுகாட்டி மோட்டார் சைக்கிள்
மற்றும் பெரோடுவா மைவி மோதிய விபத்தில் 42 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
கிள்ளான் உத்தாரா
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு இரவு 11.40 மணிக்கு தகவல் கிடைத்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.
இரவு 11.46 மணியளவில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து
எரிந்துகொண்டிருந்ததாகவும், பாதிக்கப்பட்ட ஆடவர்
சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர் என்று அத்துறை குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



