ஜலான் கெப்போங்கில் விபத்து! முதியவர் பலி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 14: நேற்று ஜாலான் கெப்போங்கில், பெரோடுவா கான்சில் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
அதிகாலை 4 மணிக்கு விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக நகர போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஜம்சூரி முகமட் இசா தெரிவித்தார்.
வலதுபுறப் பாதையில் வந்த பெரோடுவா கான்சில், சாலையில் உள்ள ஒரு பொருளைத் தவிர்க்க திடீரென பாதையை மாற்றிய ஹோண்டா சிட்டி காரில் இடதுபுறம் மோதியதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 70 வயது நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. ஹோண்டா சிட்டியின் 29 வயது ஆண் ஓட்டுநரின் கை மற்றும் உதடுகளில் காயம் ஏற்பட்டது. மேலும் அவர் மேல் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று முகமட் ஜம்சூரி முகமட் இசா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41 (1) இன் கீழ், கவனக்குறைவாகவோ அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.  இது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக RM50,000 அபராதம் விதிக்க வகை செய்கிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *