KL – சிரம்பான் சாலையில் விபத்து! இருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 10: கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலையின் Km301.2 இல் இன்று காலை ஒரு கார் பள்ளத்தில் விழுந்ததில் 16 வயது இளைஞன் உட்பட இருவர் பலியாகினர்.

நான்கு பேருடன் அதிகாலை 1.45 மணியளவில் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.

23 வயது ஆண் ஓட்டுநரும், பதின்ம வயது ஆடவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அவர் கூறினார்.

 மற்ற இரண்டு பயணிகள் - 20 வயதுடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் - கால்கள் மற்றும் கைகளில் காயமடைந்து, சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக நாஸ்ரோன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *