செனாய்–டேசாரு விரைவுச்சாலையில் விபத்து! இருவர் பலி

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் மாரி, டிச 27: மாநிலத்தில் உள்ள செனாய் - டேசாரு விரைவுச்சாலையின் KM45.6 பகுதியில் இன்று அதிகாலை நடந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் நால்வர் காயமடைந்த நிலையில், 14 வயது சிறுமி மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.

காலை 5.37 மணிக்கு விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, எட்டு பேரைக் கொண்ட மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக பாசிர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு தளபதி நசுருடின் யூசுப் கூறினார்.

காலை 5.58 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்த மீட்புக் குழு, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. வாகனங்களில் சிக்கியிருந்த 21 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் உறுதி செய்தனர்.

மற்ற ஐந்து பேரில் நான்கு பெரியவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 14 வயதுடைய ஒரு சிறுமி மீட்கப்படும் போது மயக்க நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

மீட்பு நடவடிக்கைகள் காலை சுமார் 7.30 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *