NSE நெடுஞ்சாலையில் விபத்து! - சீன நாட்டு பிரஜைகள் இருவர் பலி!
- Shan Siva
- 15 Jul, 2025
ஈப்போ, ஜூலை 15: நேற்று இரவு தாப்பா
அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (NSE) நடந்த விபத்தில் சீன நாட்டைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.
உள்ளூர் ஓட்டுநர் காயமடைந்தார்.
KM316.9 ல் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு லாரியைத்
தவிர்க்க முயன்றபோது அவர்களின் கார் சறுக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது.பாதிக்கப்பட்ட
41 வயதான சோங் ஹாங் மற்றும்
யுச்செங் பான் ஆகியோர் தலையில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்ததாக தாப்பா
காவல்துறைத் தலைவர் ஜோஹாரி யஹாயா சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
56 வயதான ஓட்டுநருக்கு
கழுத்து, கால்கள் மற்றும் கைகளில்
காயம் ஏற்பட்டது.
கோலாலம்பூரிலிருந்து
பினாங்கு நோக்கிச் சென்ற டொயோட்டா வியோஸ், திடீரென பாதையை மாற்றிய லாரியைத் தவிர்க்க வளைந்த பிறகு கட்டுப்பாட்டை
இழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஆதாரங்களுக்காக
டேஷ்கேம் காட்சிகளை மதிப்பாய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
உடல்கள் பிரேத
பரிசோதனைக்காக தாப்பா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
மீட்புப்
பணியாளர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவப் பணியாளர்களிடம்
ஒப்படைத்தனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



