குவாந்தான்– சிகாமாட் சாலையில் விபத்து! ஒருவர் பலி; நால்வர் காயம்

top-news
FREE WEBSITE AD

ரொம்பின்,  6: குவாந்தான்– சிகாமாட் சாலையில் ஏற்பட்ட மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில், 60 வயதுடைய டாக்சி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் நால்வர் காயமடைந்தனர்.

நேற்று இரவு 11.20 மணியளவில், சாலையின் கி.மீ.143 பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்டெண்ட் ஷரிப் ஷை ஷரிப் மொண்டோய் தெரிவித்தார்.

பெரொடுவா ஆல்சா வாகனத்தை ஓட்டிச் சென்ற அப்துல் ரஹ்மான் யூசொஃப் என்பவர், தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். பின்னர், ரொம்பினில் உள்ள முஆட்சாம் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த அவரது மனைவி, மகன் மற்றும் பேத்தி (வயது 14 முதல் 58 வரை) காயமடைந்து, தெங்க்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னிலை விசாரணைகளில், இந்த விபத்தில் டொயோட்டா வியோஸ் மற்றும் புரோட்டான் வீரா ஆகிய வாகனங்களும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

டொயோட்டா வியோஸ் வாகனம், 26 வயதுடைய இளைஞர் ஒருவரால் சிகாமாட்டிலிருந்து குவாந்தான் நோக்கி ஓட்டிச் செல்லப்பட்டதாகவும், மற்ற இரண்டு வாகனங்கள் எதிர்திசையில் பயணித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

டொயோட்டா வியோஸ் ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசை பாதையில் நுழைந்து, அங்குச் சென்ற இரண்டு வாகனங்களுடன் மோதியதாக நம்பப்படுகிறது என ஷரிப் ஷை கூறினார்.

இந்த விபத்தில் டொயோட்டா வியோஸ் ஓட்டுநருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. புரோட்டான் வீரா வாகனத்தை ஓட்டிய 56 வயதுடைய ஓட்டுநர் காயமின்றி தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *