மசூதி உண்டியலைத் திருடிய இளைஞர்! காவல்துறை விசாரணை!

top-news

மே 20,

மசுதியில் உள்ள ஹஜி திரட்டு நிதியைச் சேமித்து வைத்திருந்த உண்டியலிலிருந்த ரொக்கப் பணத்தைத் திருடிய இளைஞர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Akmalrizal Radzi தெரிவித்தார். நேற்று இரவு 7.30 மணியளவில் சந்தேகநபர் மசூதியிலிருந்து வெளியேறியது CCTV காணொலி பதிவாகிய நிலையில் அவரின் புகைப்படத்தைக் காவல்துறையினர் வெளியிட்டனர். இச்சம்பவம் Telok Panglima Garang பகுதியில் உள்ள ஒரு மசூதியில் நடந்தது.

நேற்று இரவு 10.27 மணியளவில் மசூதியின் பாதுகாவலர் புகார் அளித்த நிலையில் மசூதியில் உள்ள உண்டியலிலிருந்து பணத்தைத் திருடிய ஆடவர் 20 வயது உள்ளூர் இளைஞர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Akmalrizal Radzi தெரிவித்தார். மசூதியின் உண்டியலிலிருந்து RM200 காணாமல் போயிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துளது. புகைப்படத்தில் இருக்கும் ஆடவரைக் கண்டுப்பிடிக்க காவல்துறையின் விரைந்து செயல்படுவதாகவும் Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Akmalrizal Radzi தெரிவித்தார்.

Seorang pemuda tempatan berusia 20 tahun dikenal pasti mencuri wang tunai RM200 dari tabung masjid di Telok Panglima Garang. Polis Kuala Langat sedang giat menjalankan siasatan dengan bantuan rakaman CCTV dan menyeru orang awam tampil membantu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *