அடுத்த தலைமுறைக்காக CelcomDigi-யின் AI பயன்பாடு! 5000 இளைஞர்கள் பயன் பெறுவர்!
- Thinagaren Sanggaren
- 27 Aug, 2025
ஆகஸ்ட் 27,
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உலகம் முழுமைக்கும் பரவியிருக்கும் நிலையில் அடுத்த தலைமுறைக்குப் பயனளிக்கும் வகையில் CelcomDigi நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவுக்கான தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சியைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று சுபாங் ஜெயாவில் உள்ள CelcomDigi-யின் தலைமையகத்தில் நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், தரவுகள் சேமிப்பு, பகுப்பாய்வுகள் உள்ளடக்கிய தளத்தின் வாயிலாகச் சுமார் 5,000 இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டின் மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனம் நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தையும் 5G-Ai பொருளாதாரத்துடனான முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CD:NXT என்பது CelcomDigi நிறுவனத்தின் ஒரு நீண்டகால முயற்சி என்றும் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்குச் சுமார் 5,000 இளைஞர்களை டிஜிட்டல் பயன்பாட்டில் வல்லவர்களாக உருவாக்கும் என்றும் CelcomDigi நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி Datuk Idham Nawawi நம்பிக்கை தெரிவித்தார். இந்த CD:NXT அதி நவீனச் செயற்கை நுண்ணறிவின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் குறைந்தப்பட்சம் RM 100 மில்லியன் முதலீடுகளை ஈர்க்கும் என்றும் இதன் அடிப்படை கொள்கையின் மூலமாக எந்தவொரு தனிநபரும் லாபமும் கணக்கிடாமல் பயன்பாட்டாளர்களுக்கான வருவாயை அதிகரிக்கும் என்றும் CelcomDigi நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி Datuk Idham Nawawi தெரிவித்தார்.
அறிமுக நிகழ்ச்சியின் போது 20 இளம் திறமையாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, கிளவுட் பொறியியல், என 8 முக்கிய இயங்கலை பயன்பாடுகளுடன் 2 ஆண்டுகள் பயனடையும் திட்டத்தையும் CelcomDigi நிறுவனம் வெளியிட்டது. செயற்கை நுண்ணறிவின் மீதான ஈடுபாட்டை நாம் தவிர்த்தால் பின்தங்கிய ஒரு நாடாக மலேசியா ஆகிவிடும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார். இந்த செயற்கை நுண்ணறிவின் மூலமாக நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரமும் உள்ளடங்கியிருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் நினைவூட்டினார். செயற்கை நுண்ணறிவை எந்தவோர் அச்சமுமின்றி நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை விடவும் நம் எதிர்கால மலேசியாவை வழிநடத்தவிருக்கும் அடுத்த தலைமுறையிடம் செயற்கை நுண்ணறிவுக் குறித்தான அதீத நன்மையானப் பக்கத்தையும் காண்பித்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் கேட்டுக்கொண்டார். நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாம் மிகவும் பயந்தால் அல்லது மிகவும் மெதுவாக இருந்தால், நாடு முன்னேற முடியாது. நமது கவனம் எதிர்காலத்தில், குறிப்பாக டிஜிட்டல் மாற்றத்தில் இருக்க வேண்டும். நாம் அதிக இளம் திறமைகள், அவர்களின் திறன்கள் மற்றும் அவர்களின் புத்திசாலித்தனத்தை வளர்க்க வேண்டும் என அன்வார் நினைவூட்டினார்.
To develop Malaysia's next generation of digital leaders, CelcomDigi Bhd has launched its flagship programme, CD:NXT, which aims to equip 5,000 Malaysian youths with hands-on experience and future-ready skills in artificial intelligence (AI), technology, data and analytics.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



