13 ஆவது மலேசியத் திட்டம் வெற்றிபெற மனோநிலையில் மாற்றம் அவசியம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 5-

பதின்மூன்றாவது மலேசியத் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய, மனநிலையிலும் அணுகுமுறையிலும் மாற்றம் அவசியம் தேவை என்று. முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சர் ரஃபிஸி ரம்லி கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்த அரசாங்கம் தொடங்கியது என்பதைப் பார்க்காமல், 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழான நல்ல மேம்பாட்டுத் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்பதுடன், மேம்படுத்தப்படவும் வேண்டும் என்று, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி வலியுறுத்தியுள்ளார்.

"சம்பந்தப்பட்ட அரசாங்கம் அல்லது அமைச்சர் மாற்றப்பட்டால், அவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டங்கள் வழக்கமாக கைவிடப்படும் மற்றும் அவற்றுக்கு மாற்றாக புதிய திட்டங்களை உருவாக்க புதிய அரசாங்கம் கூடுதலாக பணத்தைச் செலவிடும்.

“இத்தகைய செயல் அவசியம் நிறுத்தப்பட வேண்டும். அது ஒரு நல்ல திட்டமாகவும் அதன் இலக்கு நல்லதாகவும் இருந்தால், அடுத்து வரும் அரசாங்கத்தினால் அது நிலைநாட்டப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்று. மக்களவையில் நேற்று திங்கள்கிழமை நடந்த 13ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தின்போது ரஃபிஸி தெரிவித்தார்.

தனது சொந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவரால் அத்தகைய திட்டம் மேற்கொள்ளப்படாத காரணத்தினால், அதை நிராகரிக்கும் நடைமுறையில் உள்ள இத்தகைய மனநிலை மாறவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"இதுபோன்ற மனநிலையினால், வளங்கள் ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்டு விட்ட வேளையில், நல்ல பலன்களை அளிக்கக் கூடிய கருத்துகள் அல்லது திட்டங்கள் நிராகரிக்கப் படுகின்றன. இதற்கெல்லாம் காரணம், "அவை எங்களிடமிருந்து வரவில்லை. அதனால் அவற்றை நாங்கள் ஆதரிக்கவில்லை.. என்ற மனநிலை இருப்பதுதான் என்று ரஃபிஸி கூறினார்.

மலேசியத் திட்டத்தின் கீழான திட்டங்களை கீழறுப்புச் செய்யும் இத்தகைய மனநிலை அடிப்படையிலான போக்கு முற்றாகத் துடைத் தொழிக்கப்பட வேண்டும் என்று. அவர் வலியுறுத்தினார்.

“கூட்டங்களில், ஒரு கொள்கை முடிவு அடையப்படும்போது அதை அனைவரும் ஏகமனதாக அங்கீகரிக்கின்றனர். ஆனால், அதை அமல்படுத்தும் நேரம் வரும்போது பல்வேறு முரண்பட்ட கருத்துகள் எழுகின்றன என்று அவர் கூறினார்.இதனால் சம்பந்தப்பட்ட முயற்சி அல்லது திட்டங்கள் மேற்கொள்ளப்படாமல், ஏற்கெனவே வகுக்கப்பட்ட தனது இலக்குகளை அடையாமலேயே அவை தோல்வியில் முடிந்து விடுவதாக ரஃபிஸி தெரிவித்தார்.

2026 முதல் 2030ஆம் ஆண்டு வரைக்குமான, மொத்தம் 61,100 கோடி வெள்ளி மதிப்புடைய 13ஆவது மலேசியத் திட்டத்தை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்திருந்தார்.

இத்தொகையில், மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 43.000 கோடி வெள்ளி அரசாங்க கருவூலத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதர 12,000 கோடி வெள்ளி அரசாங்கம் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்களினால் ஒதுக்கப்பட்டிருப்பதாக அன்வார் தெரிவித்திருந்தார்.இதைத் தவிர்த்து. 6,100 கோடி வெள்ளி தனியார் பொது பங்காளித்துவம் மூலம் தனியார் துறைகளிடமிருந்து வந்திருப்பதாக, நிதி அமைச்சருமான அன்வார் அறிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *