பள்ளிகளில் Ai & ChatGPT பயன்பாடுகள் கட்டுப்பாட்டில் இருக்கும்! – கல்வி அமைச்சர்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 21

பள்ளிக் கற்றல் கற்பித்தலில் Ai , ChatGPT போன்றவற்றின் பயன்பாடுகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK இன்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். உலகளாவியக் கல்வித் தர மேம்பாடுகள் குறித்தான ஆய்வுகளைக் கல்வி அமைச்சின் சிறப்புப் பணிக்குழு மேற்கொண்டு வருவதாகவும் அதன் அடிப்படையில் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார். இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு குறித்து நாட்டிலுள்ள அனைத்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கப்பட்டறை அளிக்கப்பட்டிருப்பதைக் கல்வி அமைச்சர் நினைவூட்டினார்.

கடந்த 6 மாதங்களில் Ai செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை முழுமையாகக் கையாளும் திறன் கொண்ட 11 பள்ளிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதே வேளையில் செப்டம்பருக்குள் 20 பள்ளிகளை அடையாளம் கண்டு Ai செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை விரிவுப்படுத்தபடவிருப்பதாகவும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை அளித்தார். இது தொடர்பாகக் கல்வி அமைச்சின் சிறப்புப் பணிக்குழு முக்கிய தரவுகளைத் திரட்டி வருவதுடன் பள்ளிகளின் சூழல்களையும் கண்காணித்து வருவதாகவும் முறையான ஆய்வுகளுடன் இந்த Ai செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK நம்பிக்கை அளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *