10 பேருடன் போராடி ஆர்சனலுடன் செல்சி டிரா
- Tamil Malar (Reporter)
- 01 Dec, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
லண்டன், டிச. 1-
பிரீமியர் லீக்கின் 13-ஆவது சுற்றில் ஸ்டேம்போர்ட் பிரிஜில் நடைபெற்ற லண்டன் டெர்பியில், 10 வீரர்களுடன் விளையாடிய செல்சி அர்சனலை 1-1 என டிராவுக்கு இழுத்து நிறுத்தியது.
முதல் பாதியின் 36-ஆவது நிமிடத்தில் மொய்சஸ் கைசெடோவ் சிவப்பு அட்டையினால் வெளியேறினார். இதுவரை செல்சி அணி இந்த சீசனில் ஆறாவது சிவப்பு அட்டை பெற்றுள்ளது. இருப்பினும், செல்சி வீரர்கள் பதற்றமடையவில்லை.
இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ரீஸ் ஜேம்ஸின் கார்னரில் ட்ரெவோ சலோபா ஒரு கோலை அடித்தார். ஆனால், 11 நிமிடங்களுக்குப் பின் மிகெல் மெரினோ ஒரு கோலைப் புகுத்தி சமநிலை செய்தார். அப்போது அர்சனல் 11 பேருடன் விளையாடியும், செல்சி 8 ஷாட்களுக்கு மட்டுமே அனுமதித்து சிறப்பாக பாதுகாத்தது.
இந்த டிராவால் அர்சனல் மேன்செஸ்டர் சிட்டியை விட ஐந்து புள்ளிகள் முன்னிலை வகிக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



