கேபிள் திருடிய மூவர் தப்பிக்க முயற்சி! துரத்தி மடக்கிய காவல்துறை! – தலைநகர்!
- Thinagaren Sanggaren
- 25 Aug, 2025
ஆகஸ்ட் 25,
தலைநகரில் காவல்துறையின் வழக்கமான சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற HILUX வாகனம் சாலையிலுள்ள மற்ற வாகனங்களை மோதி சேதப்படுத்தியது. நேற்று பிற்பகல் 2.45 மணிக்குத் தலைநகர் ஜாலான் செராஸில் காவல்துறையின் சோதனயை மீறி சந்தேகத்திற்குரிய வாகனம் 9 வாகனங்களை மோதி தப்பிக்க முயன்ற போது பொதுமக்களாலும் காவல் அதிகாரிகளாலும் மடக்கி பிடிக்கப்பட்ட்டதாக செராஸ் மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 9 வாகனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
சம்மந்தப்பட்ட HILUX வாகனத்திலிருந்து திருடப்பட்ட கேபிள்களும், கேபிள் வெட்டும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் வாகனத்திலிருந்த மூவரைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் செராஸ் மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூவரும் 30 முதல் 40 வயதுக்குற்பட்ட உள்ளூர் ஆடவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவர் மீது பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் முன்னதாக ஈடுப்பட்டிருப்பதையும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மூவரையும் மேலதிக விசாரணைக்காக 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செராஸ் மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



