சாலையில் கத்தியுடன் சுற்றிய இந்தோனேசிய ஆடவர் கைது! – செராஸ் காவல்துறை!
- Thinagaren Sanggaren
- 29 Oct, 2025
அக்தோபர் 29,
செராஸில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் கத்தியுடன் வன்முறையில் ஈடுபட்ட இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர். காலை 11.40 மணிக்குச் செராஸில் உள்ள Miharja அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் ஆடவர் ஒருவர் கத்தியுடன் வன்முறையில் ஈடுபடுவதாகவும் வாகனங்களைச் சேதப்படுத்துவதாகக் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்திற்குக் காவல் அதிகாரிகள் விரைந்த அந்த ஆடவரைக் கைது செய்ததாக Cheras மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆடவர் 78 வயது முதியவரைத் தாக்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Cheras மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆடவர் 25 வயது இந்தோனேசிய இளைஞர் என்றும் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பதாகவும் Cheras மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 25 வயது இந்தோனேசிய ஆடவர் கடந்த 3 நாள்களாக Miharja அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் பலரையும் தொந்தரவு செய்து வருவதாகக் குடியிருப்புவாசிகள் புகார் அளித்துள்ளதால் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாக Cheras மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



