கிராண்ட் சுவிஸ் செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி, வைஷாலி அபாரம்
- Tamil Malar (Reporter)
- 08 Sep, 2025
சமர்கண்ட், செப். 9-
செய்தி-வெற்றி மைந்தன்
உஸ்பெகிஸ்தானின்
சமர்கண்ட் நகரில் நடைபெறும் ‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி அபார
வெற்றிகளைப் பதிவு செய்தனர். இந்த 11 சுற்றுகள் கொண்ட
போட்டி, ஓபன், பெண்கள் பிரிவுகளாக
நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள கேண்டிடேட்ஸ்
செஸ் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள்.
ஓபன்
பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த
பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில்
ரஷியாவின் இவான் ஜெம்லியான்ஸ்கியை எதிர்கொண்டார். வெள்ளை காய்களுடன் ஆடிய
பிரக்ஞானந்தா, 33ஆவது நகர்த்தலில்
எதிராளியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றார். முதல் சுற்றில் அவர் டிரா
கண்டிருந்தார். இந்த வெற்றி, அவரது கேண்டிடேட்ஸ்
தகுதி பயணத்தில் முக்கியமான படியாக அமைந்தது.
பெண்கள்
பிரிவில், தமிழக வீராங்கனை
ஆர்.வைஷாலி, இரண்டாவது சுற்றில்
நெதர்லாந்தின் எலினி ரோபர்ஸை எதிர்கொண்டார். கருப்பு காய்களுடன் ஆடிய வைஷாலி, 22ஆவது நகர்த்தலில் எளிதாக வெற்றி பெற்று, தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு
செய்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



