அமெரிக்காவை மிகப்பெரிய சுனாமி அலை- விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கடந்த சில நாட்களாக உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவை மிகப்பெரிய சுனாமி தாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காஸ்கேடியா துணை பிரிவு மண்டலத்தில் ஏற்பட உள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம், அமெரிக்காவில் மிகப்பெரிய சுனாமியை உருவாக்க கூடும் என்று தேசிய அறிவியல் அகாடமியால் வெளியிடப்பட்ட வர்ஜீனியா டெக் புவியியலாளர்களின் சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.

காஸ்கேடியா துணை பிரிவு மண்டலம் வடக்கு கலிஃபோர்னியாவில் இருந்து கொலம்பியா வரை நீண்டு இருக்கும் சுமார் 600 மைல் பிளவு கோடாகும். இதில் ஏற்படும் நிலநடுக்கம் காரணமாக தான் சுனாமி தாக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதே பகுதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 8 அல்லது அதற்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஆய்வில் கூறப்பட்டுள்ளபடி, 8 ரிக்டருக்கும் மேல் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் அது அமெரிக்காவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

பொதுவாக நிலநடுக்கம் ஏற்பட்டால் தோன்றும் சாதாரண சுனாமியாக இல்லாமல் அடுத்த 15 நிமிடங்களிலேயே சுமார் 1,000 அடி உயரத்திற்கு அலை எழ கூடிய சுனாமியாக அது இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இத்தகைய ராட்சத சுனாமி அலை எழும் நிலையில், மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெறும் 15 நிமிடங்கள் மட்டுமேம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இத்தகைய மிகப்பெரிய சுனாமி அலைகள் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் விண்கல் மோதல்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான இயற்கை பேரழிவுகளை தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவை பெரிய அளவிலான சுனாமி தாக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அது பொதுமக்களை மிகுந்த அச்சத்தில் ஆழுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *