பள்ளியில் ஆசிரியர் அடித்ததை வீட்டில் சொன்னால் வீட்டிலும் அடி விழும்! – துணை அமைச்சர்!
- Thinagaren Sanggaren
- 29 Oct, 2025
அக்தோபர் 29,
மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உரிமைக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருப்பதாகத் துணை அமைச்சர் M Kulasegaran நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பள்ளி ஆச்சிரியர்களிடத்தில் மீண்டும் பிரம்படி வழங்க அரசு முன்வர வேண்டும் என்கிற முன்மொழிவு தற்போதைய நடைமுறைக்கு சரியாக இருக்காது என M Kulasegaran தெரிவித்தார். கடந்த காலங்களில் நான் பள்ளி மாணவராக இருந்த போது ஆசிரியர்களிடம் அடி வாங்கிய மாணவன் தான். பள்ளியில் ஆசிரியர் என்னை அடித்ததை வீட்டில் சொன்னால் ஆசிரியர் அடிக்கும் அளவிற்குத் தவறு செய்திருக்கிறாய் என கூறி வீட்டிலும் எனக்கு அடி விழும். அது அன்றைய காலம். அதே காலத்தில் நாம் இப்போது இல்லை என்பது நடைமுறை என M Kulasegaran நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்கள் கல்விக் கற்பதற்கான அடிப்படையான சூழலை உருவாக்குவதிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் மடானி அரசு உறுதியா இருப்பதாக M Kulasegaran தெரிவித்தார். அதே வேளையில் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க வேண்டிய முதன்மை நபர்களாக இருக்க வேண்டும் என்பதையும் M Kulasegaran வலியுறுத்தினார். அதே வேளையில் ஆசிரியர்களைக் குறை கூறவும் ஆசிரியர்களை இழிவுப்படுத்தவும் எந்தவொரு குற்றச்சம்பவங்களையும் அரசு ஏற்காது என சட்ட நிர்வாகச் சீர்த்திருத்த துணை அமைச்சர் M Kulasegaran நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



