‘ஜன நாயகன்’ இணையத்தில் கசிந்த விவகாரம்; தேடப்பட்டு வந்த நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
- Surendran Sumdraraj
- 21 Jun, 2026
சென்னை, ஜூன் 21 –
நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த நபர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு வழக்கு விசாரணையில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பலரைக் கைது செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் தொடர்புடையதாக 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், வழக்கில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த ஒருவர் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு கோரி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் தன்மை மற்றும் விசாரணையின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது என தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



