சமூகநலப் பணிகளை செய்வதில் எகோன்சேவ் பேரங்காடி நிறுவனம் மகிழ்ச்சி!
- Muthu Kumar
- 13 Oct, 2025
(தி.ஆர்.மேத்தியூஸ்)
ஜாவி, அக். 13-
ஆண்டுதோறும் தீபாவளியைப் போன்ற சமயப் பெருநாட்களைக் கொண்டாடும் வசதி குறைந்த பி40 பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு அன்பளிப்பினை வழங்குவதில் எகோன்சேவ் பேரங்காடி என்றும் மகிழ்ச்சி கொள்வதாக அதன் வட மாநில விற்பனைப் பிரிவின் நிர்வாகி துவான் ஸம்சூரி தெரிவித்தார்.
இந்த உதவி திட்டத்தை பேரங்காடியின் சமூக நலப்பிரிவின் ஆதரவோடு ஆண்டுதோறும் செய்து வருவதாக, தென் செபராங் பிறை,சுங்கை ஜாவி எகோன்சேவ் கிளையின் ஏற்பாட்டில் 30 இந்தியக் குடும்பங்களுக்கு உதவிப் பற்றுச் சீட்டினை வழங்கிய நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.
தமது நிறுவனத்துக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் வேளையில், அதன் ஓர் அங்கமாக அவர்களின் மகிழ்ச்சியில் பங்கேற்பதும் எங்களின் கடமை என்றார். இந்நிகழ்வில் தீபாவளி பற்றுச் சீட்டு வழங்கப்பட்டதோடு, சிறுவர்களுக்காக கோலப்போட்டியும் சிறப்பாக நடத்தப்பட்டது.
கோலப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும் அன்பளிப்பும் நற்சான்றிதழும் பரிசாக வழங்கப்பட்டதோடு பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. எகோன்சேவ் ஜாவி கிளையின் நிர்வாகி கார்த்திக், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்படையச் செய்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



