கடத்தலில் சம்மந்தப்பட்ட 18 அரசு அதிகாரிகள்! RM 7 மில்லியன் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 28,

சட்டவிரோதக் குடியேறிகள் கடத்தல் போன்றவற்றில் சம்மந்தப்பட்டதாக நம்பப்படும் 18 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக அவர்கள் பின்னணியில் இருப்பவர்களையும் விசாரித்து வருவதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். COUNTER SETTING எனும் அடையாளத்துடன் நாட்டின் எல்லை பகுதிகளில் கடத்தலை மேற்கொண்டதாகவும் கடத்தல்காரர்களுக்கு உதவியதாகவும் 18 அமலாக்க அதிகாரிகளுடன் 5 நிறுவன உரிமையாளர்கள் என மொத்தம் 30 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டிருப்பதாக Tan Sri Azam Baki தெரிவித்தார். 

இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் RM 1.82 மில்லியன் மதிப்பிலான 15 சொகுசு வாகனங்களும் RM 2.26 மில்லியன் மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் மொத்தம் 126 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பு சுமார் RM 4.4 மில்லியன் மதிப்பு எனக் கணக்கிடப்பட்டிருப்பதாகவும் 8 லட்சம் ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக Tan Sri Azam Baki தெரிவித்தார். இதுவரையில் இந்த கடத்தல்களில் சம்மந்தப்பட்டவர்கள் என நம்ப்பப்படும் மேலும் சிலர் மீது SPRM சந்தேகிப்பதாகவும் அவர்களைக் கண்காணித்து வருவதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *