பூடி மடானி RON95 மானிய திட்டம் தொடங்குவதால் சனி - ஞாயிறுகளிலும் JPJ கவுண்டர்கள் திறந்திருக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 22: பூடி மடானி RON95  மானிய திட்டம் நடமுறைக்கு வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களின் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க உதவுவதற்காக சாலைப் போக்குவரத்து துறையான JPJ வார இறுதி நாள்களிலும் அலுவலக நேரத்தை நீட்டித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹீம் இன்று அறிவித்த இந்த திட்டம் செப்டம்பர் 30 முதல் அமலுக்கு வரும். இந்தத் திட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்ற அனைத்து மலேசியர்களுக்கும் RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM1.99 விலையில் வழங்கப்படும்.

இந்நிலையில், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 26 வரை அனைத்து JPJ அலுவலகங்கள் மற்றும் கிளைகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கவுன்டர்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நாட்களில் வர இயலாத பொதுமக்களுக்கு இத்திட்டம் அதிக வசதியை வழங்கும் என்றும், தற்போது 23 லட்சம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் உரிமையாளர்கள், அவர்களின் ஓட்டுநர் உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலாவதியானதால் செயலற்ற நிலையில் உள்ளதாகவும், 15.2 மில்லியன் பேர் மட்டுமே செயல்பாட்டில் உள்ளனர் என்றும் சாலைப் போக்குவரத்து துறை தலைவர் டத்தோ ஏடி ஃபாத்லி ரம்லி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *