பொறுப்பற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மீது நடவடிக்கை! - 24 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!
- Shan Siva
- 14 Jul, 2025
குவந்தான், ஜூலை 14: நகரில் பொறுப்பற்ற வாகன ஓட்டிகளை குறிவைத்து
நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் போலீசார் 194 போக்குவரத்து சம்மன்களை
பிறப்பித்து 24 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
15 முதல் 25
வயதுடைய 65 பேர் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக
குவந்தான் காவல்துறைத் தலைவர் முகமட் அட்லி மாட் டாவுட் தெரிவித்தார்.
அவர்களில்,
18 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர்
பொது சாலையில் ஆபத்தான சாகசத்தை நிகழ்த்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
இதுபோன்ற
செயல்கள் வாகன ஓட்டிக்கு மட்டுமல்ல, மற்ற சாலை பயனர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன என்று முகமட் அட்லி கூறினார்.
சந்தேக நபர் மீது
சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 42(1) இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது. இது சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் உட்பட கடுமையான
தண்டனைகளை விதிக்கிறது.
இந்தச்
சட்டத்தின் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை,
RM5,000 முதல் RM15,000 வரை அபராதம் அல்லது ஓட்டுநர் உரிமம் ரத்து
செய்யப்படலாம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



