பகாங் தொழில் பகுதிகளில் அதிரடி வேட்டை-78 அந்நிய நாட்டவர் கைது!

- Muthu Kumar
- 29 May, 2025
குவாந்தான், மே 29:
gebeng மற்றும் gambang தொழில்துறை பகுதிகளில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் ஏழு மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, 78 ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்களை குடிநுழைவுத்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் பங்களாதேஷ், சீனா மற்றும் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 பேர் கொண்ட அமலாக்கக் குழுவால் வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக பகாங் குடிநுழைவுத் துறை இயக்குனர் நூர்சஃபாரிசா இஹ்சான் தெரிவித்தார்.
Op Gempur Sasar என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, மூன்று தொழில்துறை வளாகங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் சோதனை மேற்கொண்டதில் 40 வயதுடைய 74 ஆண்களையும், நான்கு பெண்களையும் கைது செய்ததாக அவர் கூறினார்.
Kementerian Imigresen telah menahan 78 warga asing tanpa dokumen selepas operasi selama tujuh jam di tiga kawasan perindustrian Gebeng dan Gambang. Kebanyakan tahanan berasal dari Bangladesh, China dan Kemboja, dengan 60 anggota terlibat dalam operasi tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *