பெர்சாத்து உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவை! - பாஸ் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 28:  பெர்லிஸ் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷுக்ரி ரம்லிக்கு வழங்கிய ஆதரவை பெர்சாத்து  கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்ற விவகாரம், பெரிகாத்தான் நேஷனல் (PN) உச்ச கவுன்சிலில் விவாதிக்கப்பட வேண்டும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார். அந்த 5 பேரின் நடவடிக்கை, கூட்டணிக்கு பாதிப்பு விளைவிப்பதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

பெர்சாத்து, பாஸ் கட்சியின் அரசியல் கூட்டாளி என்பதாலும், பெர்லிஸ் மாநிலத்தில் பெரும்பான்மை சட்டமன்ற இடங்களை பாஸ் கட்சி வைத்திருப்பதாலும், இவ்வகை நடவடிக்கைகள் தவறானவை என அவர் வலியுறுத்தினார். நிலைத்தன்மையும் ஒற்றுமையும் உறுதியாக இருக்க, பெரும்பான்மை இடங்களை வைத்துள்ள கட்சியே பெர்லிஸ் சட்டமன்றத்தை வழிநடத்த வேண்டும் என்று அவர் FMT-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதனிடையே, பெர்சாத்து கட்சி தலைவர் முகைதீன் யாசின், ஷுக்ரி ரம்லிக்கான  ஆதரவை வாபஸ் பெறுமாறு தங்கள் கட்சி எந்த உத்தரவையும் 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். மேலும், பெர்லிஸ் அரசர் அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகே, முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்களை பெர்சாத்து கட்சி சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக, உண்மை நிலையை அறிய, பெர்லிஸில் உள்ள தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து விளக்கங்கள் பெறப்படும் என்றும் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *