கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பாலர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!
- Muthu Kumar
- 06 Sep, 2025
புத்ராஜெயா, செப். 6-
மித்ரா எனப்படும் இந்தியர் உருமாற்றுப் பிரிவின் உதவிகளைப் பெறக்கூடிய, தனியார் பாலர் பள்ளிகள், கூடுதல் மாதாந்திரக் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பி40 பிரிவைச் சேர்ந்த பெற்றோருக்கு சுமையை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மித்ராவின் தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
"மித்ரா மூலம் முழு கல்வி உதவிகளைப் பெற்ற தனியார் பாலர் பள்ளிகள் கூடுதல் மாதாந்திரக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மித்ராவிற்கு புகார்கள் வந்திருக்கின்றன. மித்ரா கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். சில பாலர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் செலுத்தப்பட்ட பணத்தை பெற்றோரிடமே மீண்டும் ஒப்படைத்திருக்கின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் நடவடிக்கை எடுப்போம்," என்றார் அவர். 2025 Anak Pintar, Negara Gemilang பாலர் பள்ளிகள் ஆரம்ப கல்விக்கான உதவித் தொகை திட்டத்தின் ஒப்பந்த கையொப்பமிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரபாகரன் இதனைக் கூறினார்.இந்த உதவித் திட்டத்திற்கு 178 தனியார் பாலர் பள்ளிகள் விண்ணப்பித்திருந்த வேளையில், 173 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய ஐந்து பாலர் பள்ளிகள் நிராகரிக்கப்படவில்லை என்றும், ஆவணங்கள் பற்றாக்குறையால் மட்டுமே அவை தேர்வு செய்யப்படவில்லை என்றும் பிரபாகரன் விவரித்தார்.இதற்கு, 77 லட்சத்து 50 ஆயிரத்து 575 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், நான்காயிரத்து 25 மாணவர்கள் பயனடையவிருப்பதாக அவர் கூறினார்.
மித்ரா மூலம் முழு கல்வி உதவிகளைப் பெற்ற தனியார் பாலர் பள்ளிகள் கூடுதல் மாதாந்திரக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மித்ராவிற்கு புகார்கள் வந்திருக்கின்றன. மித்ரா கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். சில பாலர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பாலர் பள்ளிகள் செலுத்தப்பட்ட பணத்தை பெற்றோரிடமே மீண்டும் ஒப்படைத்திருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் நடவடிக்கை எடுப்போம்.." என்றார் அவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



