தனது 75வது பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது 1975ம் ஆண்டில்தான். அதனால் இந்த 2025ம் ஆண்டு ரஜினிக்கு அவரது சினிமா வாழ்வில் 50 ஆண்டு நிறைவு பொன்விழா ஆண்டாக அமைந்து விட்டது.அதே போல் அவரது வயதும் 75 என்கிற முக்கிய எண்ணிக்கையை தொட்டிருக்கிறது.

இதற்கிடையே நேற்று ரஜினி பிறந்த நாளில் மீண்டும் வெளியான படையப்பா படமும் 25 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர்களுக்கு வந்திருக்கிறது. அதனால் சினிமா பயணத்தில் பொன்விழா, ரஜினிக்கு 75வது பிறந்த நாள், 25 ஆண்டுகளுக்கு பின் படையப்பா ரீ ரிலீஸ் என இது முப்பெரும் விழாவாக அமைந்துவிட்டது.

ரஜினியின் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை பல முக்கிய அரசியல் தலைவர்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என சினிமா பிரபலங்கள் முக்கிய தொழிலதிபர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். நடிகர் கமல் ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது அன்பை வெளிக்காட்டியிருந்தார்.

தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் நேற்று தங்களது அன்பு தலைவரின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்களுக்கு அன்னதானம் நேர்த்தி கடனாக தேர் இழுத்தல் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல் பொது இடங்களில் இனிப்பு வழங்குதல் என தங்களது உற்சாகத்தை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 75வது பிறந்தநாள் சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அவர் குடும்பத்துடன் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருக்கிறார். நேற்றிரவு சென்னையில் இருந்து திருப்பதி சென்ற அவர் திருமலையில் தங்கியிருக்கிறார்.

இன்று அதிகாலை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் திருமலையில் உள்ள ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்தார். தனது குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது பிறந்தநாள் கொண்டாடிய கையோடு குடும்பத்தோடு நேரடியாக திருப்பதி ஏழுமலையானை நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *