நடிகர் ரவி மோகனின் சொத்துக்கள் முடக்கம்?
- Muthu Kumar
- 21 Aug, 2025
நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கம் செய்யக்கோரி 'பாபி டச் கோல்டு' தயாரிப்பு நிறுவனம் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதற்காக பெற்ற ரூ.5.90 கோடி முன்பணத்தை திரும்ப தரக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம் மனு அளித்தது. அந்த மனுவில், கடந்த 2024ம் ஆண்டு நடிகர் ரவி மோகனுடன் 2 படங்களை தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதற்காக ரூ.5.90 கோடியை முன்பணமாக ரவி வாங்கியதாகவும் குறிப்பிட்டது.
அத்துடன் படத்திற்கான கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளை தொடங்காததால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம், அந்தப்பணத்தை சொந்த தயாரிப்பு அல்லது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதால் பணத்தை திரும்ப தரக்கோரி வலியுறுத்தி இருந்தது. மேலும் 'ப்ரோ கோட்' படத்தை தயாரிக்கவும், வேறு நிறுவன தயாரிப்பில் நடிக்கவும் ரவி மோகனுக்கு தடை விதிக்க வேண்டும் அந்நிறுவனம் மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ரூ.5.90 கோடிக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கம் செய்யக்கோரி படத்தயாரிப்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். ரவிமோகன் உத்தரவாதம் தாக்கல் செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



