நடிகர் சிம்பு குறித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்!
- Muthu Kumar
- 18 Jan, 2026
அமரன் படத்துக்கு பிறகு கடந்தாண்டில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வௌியானது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வௌியான இந்த படம் பிரமாண்ட வெற்றியை வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. ஆனால் வணிக ரீதியான வெற்றியை பெற்ற படமாக இருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முக்கிய படமாக இருக்கவில்லை.
அதன்பிறகு இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி படம் கடந்த 10ம் தேதி ரிலீஸானது. இதுவும் அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ படமாக இருக்கவில்லை. ரசிகர்கள் கலாய்க்கிற அளவுக்கு மிக சுமாரான படமாக இருந்து விட்டது.
இருப்பினும் இந்த படம் நடிகர் ரவிமோகனுக்கு நல்ல வில்லனாக பெயர் பெற்று தந்திருக்கிறது. இந்த படத்தை பொருத்த வரை ஸ்கோர் செய்தது ரவிமோகன் மட்டும்தான். மற்றபடி சுதா கொங்கராவுக்கு மிகவும் மோசமான சொதப்பல் இயக்குனர் என்கிற பெயரை ரசிகர்களிடம் பராசக்தி பெற்றுத் தந்துவிட்டது என்பது கசப்பான உண்மை.
மேலும் விஜய் ரசிகர்களை ரவுடிகள் குண்டர்கள் என்று அவர் தரக்குறைவாக பேசியதும் இன்னும் அவருக்கான மரியாதையை கெடுத்துவிட்டது என்பதும் உண்மை. இது அவரது இயக்கத்தில் இனி படங்கள் வெளியானால் இன்னும் அதிக பாதிப்பை தர வாய்ப்புள்ளது. இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் சிம்பு குறித்து பேசி வம்பில் சிக்கியிருப்பதும் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், மாநாடு படத்தில் ஒரு கட்டத்தில் சிம்பு நடிக்க முடியாத போது என்னை இயக்குனர் அணுகினார். ஆனால் கதையை கேட்ட நான் இதில் சிம்பு நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று மறுத்துவிட்டேன். அதற்கு பிறகு சிம்பு தொடர்ந்து அந்த படத்தில் நடித்தார் என்று கூறியிருந்தார்.
மாநாடு படம் ஒரு ஷெட்யூல் முடிந்த போது கொரோனா தொற்று வேகமாக பரவியது. அதனால் ஷூட்டிங் நடக்காமல் போனது. பிறகு கோவிட் தொற்று காலம் முடிந்த பிறகு மாநாடு படம் ஷூட்டிங் நடந்தது. மற்றபடி சிம்பு நடிக்காமல் போய் அவருக்கு பதிலாக எஸ்கேவை நடிக்க யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஒருவேளை மாநாடு படத்தில் சிம்பு நடிக்க முடிவு செய்வதற்கு முன்பே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு நடிக்க அவரிடம் பேசியிருக்கலாம் என்கிற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



