அதீத வெப்பம்! 1 குழந்தை மரணம்! 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 23,

அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாத நோயால் 1 குழந்தை உயிரிழந்திருப்பது மனவலியை ஏற்படுத்தியிருப்பதாகச் சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து வெப்பநிலை மாற்றத்தை நாம் அனைவரும் உணர்கிறோம். அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் விழிப்புணர்வு மூலமாகவும் வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சையை அளித்து வந்தாலும் இதுவரை 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

சூரியனின் கதிர்வீச்சு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதால் பொதுவெளியில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கும்படியும் குறிப்பாகக் குழந்தைகளை நிழலானப் பகுதிகளிலேயே வைத்திருக்கும்படியும் சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad வலியுறுத்தினார். தலை சுற்றல், அதீத தாகம், உடல் சோர்வு என்பவை வெப்பத்தின் பக்கவாத அறிகுறிகளாகக் கருதப்படுவதால் பொதுமக்கள் உடனடியாகத் தண்ணீர் குடித்து உடலை குளிர்ச்சியடைய வைக்க வேண்டும். மாறாகக் குளிபானங்களை இயன்றளவு தவிர்ப்பது தற்போதைய வெப்பநிலைக்குப் பொருத்தமானது என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *