மலேசியா மீதான அமேரிக்காவின் வரி ஏற்றம்! ஆசியான் நாடுகளைப் பாதிக்காது!

top-news

ஜூலை 9,


அமேரிக்காவின் DONALD TRUMP மலேசியா மீது விதித்திருக்கும் புதிய வரியால் ஆசியான் நாடுகளுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim இன்று நம்பிக்கை அளித்தார். இன்று கோலாலம்பூர் மாநாட்டு மைதானத்தில் நடைபெற்ற 58 ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுடனானச் சந்திப்பில் பங்கேற்ற Datuk Seri Anwar Ibrahim இதனை வலியுறுத்தினார். ஆசியான் நாடுகளுக்கான தலைமை பொறுப்பில் இருக்கும் மலேசியாவின் மீதான அமேரிக்காவின் ஏற்றுமதி வரி ஏற்றத்தால் இது மற்ற ஆசியான் நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஒரு சில ஆசிய நாடுகளின் பிரதமர்கள் தம்முடன் கலந்துரையாடியதாக Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். 

மேல்நாடுகளுடன் மலேசியாவின் நல்லுறவைப் பாதிக்கும் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம், மலேசியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் மற்ற ஆசியா நாடுகளையும் பாதிக்கும் என்பதைத் தாம் உணர்ந்திருப்பதாகவும் நாளை அமேரிக்காவின் வெளியுறவுத் தலைமை செயலாளர் Marco Rubio மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் அவருடன் அதிகாரப்பூர்வச் சந்திப்பைத் தாம் நடத்துவதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். மார்கோ ரூபியோவுடனானத் தனது சந்திப்பில் நல்லதொரு தீர்வாக அமையும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதியளித்தார்.


Perdana Menteri Anwar Ibrahim menegaskan cukai eksport baharu Amerika Syarikat ke atas Malaysia tidak akan menjejaskan negara ASEAN lain. Beliau memberi jaminan isu ini akan dibincangkan bersama Setiausaha Luar AS Marco Rubio dalam lawatan rasmi ke Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *