குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 13,

கிளாந்தானில் குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இரு மலேசியர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலதிக விசாரணைக்காக இருவரும் இன்று காலை Pasir Mas Sesyen நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். குற்றத்தை மறுத்த இருவரும் ஜாமின் கோரிக்கையுடன் மேலதிக விசாரணையைக் கோரினர். 

கடந்த ஆண்டும் 45 வயது பெண், தன் குழந்தையைப் பள்ளிக்கு அழைத்து செல்லும் போது 4 பேர் கொண்ட கும்பல் அவருடைய குழந்தையைக் கடத்த முயற்சித்ததாகவும, கொள்ளைக் கும்பலிடமிருந்து தப்பிக்க தன் குழந்தையை புதருக்குள் வீசியதாகவும் பாதிக்கப்பட்ட 45 வயது பெண் புகார் அளித்தார். சம்மந்தப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இருவரும் 51 வயது 24 வயதுடைய உள்ளூர்வாசிகள் என்றாலும் அவர்களுக்கு எதிரான ஆதராங்களைக் காவல்துறை சமர்பிக்கை 18 மே வரையில் அவகாசம் வழங்குவதாக Pasir Mas Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா RM12,000 ஜாமின் வழங்குவதாகவும் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க கால அவகாசம் வழங்குவதாகவும் கைது செய்யப்பட்ட இருவருக்கும் Pasir Mas Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *