கடத்தலில் ஈடுபட்ட இல்லத்தரசி உட்பட 8 பேர் கைது! நீதிமன்றம் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 8,

ஆடவர் ஒருவரைக் கடத்தியதாகவும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டிருந்ததாகவும் கைது செய்யப்பட்ட ஒரு பெண் உட்பட 8 பேர் இன்று கோத்தா பாரு நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். 20 முதல் 45 வயதுடைய 8 பேரையும் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டபோது தங்கள் மீதான குற்றத்தை மறுத்து மேலதிக விசாரணையுடன் ஜாமின் கோரினர். ஜாமினை மறுத்த நீதிபதி மேலதிக காவல் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் அடுத்த நீதிமன்ற விசாரணை நவம்பர் 9 மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டார். 

கடந்த செப்டம்பர் 26, தனியார் நிறுவனத்தின் ஊழியரைக் கும்பல் ஒன்று கடத்தி RM 150,000 பிணை தொகை கேட்டு மிரட்டிய வழக்கில் காவல்துறையின் தீவிர தேடுதலுக்குப் பின்னர் இந்த 8 பேரும் கிளாந்தானின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின் போது துப்பாகிகளும் தோட்டாக்களும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது. அவர்கள் கடத்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் உடைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என இல்லத்தரசி உட்பட 8 பேரும் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *