இளைஞரை லாரியில் கடத்திய கும்பல்! – தலைநகரில் பரபரப்பு! காவல்துறை விசாரணை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 23,

சாலையின் நடுவே 4 பேர் கொண்ட கும்பல் இளைஞர் ஒருவரைச் சரமாரியாகத் தாக்கி லாரியில் வலுக்கட்டாயமாகக் கடத்தும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட நான்கு ஆடவர்களையும் காவல்துறையினர் தேடி வருவதாக Subang Jaya, மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார். இது தொடர்பாக மற்றொரு காணொலியும் சமூகவலைத்தலங்களில் பரவிய நிலையில் கடத்தப்பட்ட இளைஞருடன் லாரியின் உரிமையாளரும் மன்னிப்புக் கேட்டதாகவும் ஆனால் இந்த காணொலியின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் தேடி வருவதாகவும் Subang Jaya, மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த திங்கள் பூச்சோங்கிலுள்ள Puchong Permai சாலையில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. நேற்றிரவு கடத்தப்பட்ட இளைஞர்களின் நண்பர்கள் என அறியப்படும் 100க்கும் மேற்பட்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சாலையில் கடுமையாக நடந்துக் கொண்டதாகவும் காணொலிகள் வெளியாகிய நிலையில் காவல்துறையின் விசாரணைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு தரப்பினரும் செயல்பட வேண்டாம் என Subang Jaya, மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat எச்சரிக்கை விடுத்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *