தைப்பிங்கில் மின்கேபிள்களைத் திருடிய நால்வர் கைது!
- Thinagaren Sanggaren
- 16 Nov, 2025
நவம்பர் 16,
சாலையின் நடுவே இரு வாகனங்கள் மின்கேபிள்களத் திருடும் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து கேபிள்களைத் திருடியதாக நம்பப்படும் நால்வரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அதே கும்பல் இன்று அதிகாலை 1.50 மணியளவில் தைப்பிங்கில் உள்ள Batu Kurau தொழில்கல்லூரியின் அருகில் கேபிள்களைத் திருடும் போது கல்லூரி மாணவர் காவல்நிலையத்திற்கு அவசர அழைப்பின் மூலமாகத் தகவல் தெரிவித்ததாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 4 உள்ளூர் ஆடவர்களையும் கைது செய்ததாகத் தைப்பிங் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Nasir Ismail தெரிவித்தார்.
துரிதமாகச் செயல்பட்ட கல்லூரி மாணவரின் செயலுக்கு Mohamad Nasir Ismail பாராட்டைத் தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரும் கடந்த 2 ஆண்டுகளாக மின்கேபிள்கள் திருட்டில் ஈடுப்பட்டு வருவதாகவும் அவர்களிடமிருந்து கேபிள் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்களைப் பறிமுதல் செய்திருப்பதாகவும் தைப்பிங் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Nasir Ismail தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நால்வரும் 38 முதல் 41 வயதுக்குற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக 3 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தைப்பிங் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Nasir Ismail தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



