115 கிலோ போதைப்பொருளுடன் ஆடவர் கைது!
- Thinagaren Sanggaren
- 05 Nov, 2025
நவம்பர் 5,
வீட்டில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த 55 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Rahaman Arsad தெரிவித்தார். கடந்த வாரம் ஜொகூர் Iskandar Puteriயில் உள்ள Taman Bukit Indah குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் பெட்டிகளை லாரியிலிருந்து இறக்கியதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்ற நிலையில் காவல்துறையினர் நேற்று சோதனையை மேற்கொண்டதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Rahaman Arsad தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய வீட்டிலிருந்து 25 கிலோ ekstasi, 23 கிலோ syabu, 22 கிலோ methamphetamine, 13 கிலோ ketamine, 19 கிலோ erimin என மொத்தம் 115 கிலோ எடையுள்ள பல்வேறு வகையிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக Datuk Rahaman Arsad தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் Toyota Vios வாகனமும் 10,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் Datuk Rahaman Arsad தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட 115 கிலோ போதைப்பொருளின் மதிப்பு RM11.4 மில்லியன் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட 55 வயது உள்ளூர் ஆடவர் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Rahaman Arsad தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



