தப்பி ஓடிய போதைப்பொருள் வியாபாரிகள்! 7KM விரட்டி பிடித்த போலிசார்!

top-news

மார்ச் 13,


போதைப்பொருள் வழக்குகாகத் தேடப்படும் குற்றவாளிகள் இருவர் சாலை போக்குவரத்து சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற நிலையில் சுமார் 7 கிலோ மீட்டர் துரத்தி காவல்துறையினர் கைது செய்தனர். இன்று காலை மூவார் சாலையில் சோதனையின் போது சாம்பல் நிற Honda City வாகனத்தில் பயணித்த இருவர் காவல்துறையின் சோதனையை மீறி தப்பிச் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது. சுமார் 7 கிலோ மீட்டர் துரத்தி சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் அதிகாரிகள் கைது செய்ததாக மூவார் மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.

34 வயது 24 வயதுள்ள இருவரும் Taman Selasih பகுதியில் பிடிப்பட்டதாகவும் சோதனையில் இருவரும் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக இருவர் மீதும் முன்னமே வழக்குகள் இருந்துள்ளதாகவும் மூவார் மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் மூவார் காவல் நிலையத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக Raiz Mukhliz Azman தெரிவித்தார்.

Dua lelaki yang positif dadah ditahan selepas cuba melarikan diri sejauh 7km dalam operasi polis di Muar. Mereka menaiki Honda City dan enggan berhenti ketika diperiksa. Saringan air kencing mendapati mereka positif methamphetamine dan mempunyai rekod jenayah serta dadah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *