துன் டைம்மை அன்வார் பழிவாங்குகிறார்! நைமா மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார்!
- Thinagaren Sanggaren
- 29 Aug, 2025
ஆகஸ்ட் 29,
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் Daim Zainuddin சொத்துகள் மீதான நீதிமன்ற வழக்குகளுக்குப் பின்னனியில் பிரதமர் அன்வாரின் பழிவாங்கும் எண்ணம் இருப்பதாகத் துன் டைம்மின் மனைவி நைமா அப்தூல் காலிட் மனித உரிமை மீறலிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் முதல் சோதனையின் போது நிதி மீறல்கள் இல்லை என நிரூபிக்கப்பட்ட பின்னரும் விசாரணைகள் தொடர்வதற்காகத் துன் டைம்மின் உறவினர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதை நைமா அப்தூல் காலிட் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் அன்வாரின் பழிவாங்கும் ஒரு முயற்சியாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்த பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக நைமா அப்தூல் காலிட் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பிரதமர் அன்வார் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு துறைகளின் மூலமாகத் தம்மை அச்சுறுத்துவதாகவும் இது குறித்து சர்வதேச மனித உரிமை மீறல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நைமா அப்தூல் காலிட் 6 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை மனித உரிமை மீறல் ஆணையத்திடம் வழங்கினார்.
துன் டைம்மின்
அனைத்து சொத்துகளுக்கும் முறையான ஆவணங்கள் இருப்பதாகவும் அந்த ஆவணங்களை வழங்கினாலும்
லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமும் LHDN, போன்ற அரசுத் துறைகள் அந்த ஆவணங்கள் போதுமானதாக
இல்லை என ஆவணங்களைத் திருப்பி அனுப்புவதாகவும் நைமா அப்தூல் காலிட் தெரிவித்தார். இது
குறித்தான நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் தனக்கு முறையான விசாரணை வேண்டும் எனும்
கோரிக்கையை நைமா அப்தூல் காலிட் மனித உரிமை மீறல் ஆணையத்திடம் முன்வைத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



