அன்வாரின் துரோகத்திற்குத் துன் டைம் மரணம் பதில் சொல்லும்! – துன் டைம் மனைவி!
- Sangeetha K Loganathan
- 20 Nov, 2024
நவம்பர் 20,
முன்னாள் நிதி அமைச்சர் Daim Zainuddin நாட்டின் மகத்தானத் தலைவராக வலம் வர வேண்டியவர், அவரை அன்வாரின் துரோகமும் பொய்களும் பலவீனப்படுத்தி அவரின் இறுதி காலத்தில் துயரங்களை அனுபவிக்க வைத்துவிட்டது என துன் டைம்மின் மனைவி Na'imah Abdul Khalid தெரிவித்துள்ளார்.
துன் டைம்மின் வழக்குகளை நீதிமன்றம் தொடர வேண்டும். அவர் குற்றமற்றவர் என நீதி வழங்கும்போது அன்வார் தலை குனிந்து நிற்பதை நான் பார்க்க வேண்டும் என Na'imah Abdul Khalid தெரிவித்துள்ளார். அன்வார் துன் டைம்முடன் கை கோர்த்து அரசாங்கத்தை எதிர்த்த காலத்தையும், அன்வாருக்கு ஆதரவாகத் துன் டைம் இல்லாததால் அன்வாரின் துரோகத்திற்குத் துன் டைம் பலியானதாக Na'imah Abdul Khalid தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகள் துன் டைம் அதிகமாக வருத்தப்பட்டதால், அவரின் நேர்மையை நிரூபிக்க அவர் போராடியதாகவும் Na'imah Abdul Khalid தெரிவித்தார். துன் டைம் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவர் குற்றமற்றவர் எனும் உண்மையை மலேசியா அறிய வேண்டும் என Na'imah Abdul Khalid வலியுறுத்தினார்.
"Pembebasan Daim kelak akan membuktikan pengkhianatan dan pembohongan Anwar,” kata Na’imah pada satu kenyataan media. Isteri bekas menteri kewangan Daim Zainuddin menuntut Peguam Negara (AG) meneruskan kes mahkamah jenayah berkaitan pendedahan aset terhadap arwah suaminya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *