சட்டமன்றத்தின் எண்ணிக்கை அதிகரிப்பா? டி.ஏ.பி கடும் எதிர்ப்பு!

top-news

ஜூலை 8,


அடுத்த மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் போது சரவாக்கில் சட்டமன்ற எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவை என்ன என சரவாக் மாநில டி.ஏ.பி சட்டமன்ற உறுப்பினர் Violet Yong கேள்வி எழுப்பியுள்ளார். 17 புதிய சட்டமன்றங்களைத் தோற்றுவிக்கும் GPS கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக டி.ஏ.பி கண்டம் தெரிவிப்பதாகவும் தேர்தல் நெருங்கும் இது போன்ற நேரத்தில் புதிதாகச் சட்டமன்றத்தைத் தோற்றுவிப்பது அவசியமற்றது என்றும் அரசியல் தேவைக்காக மாநில அரசு இது போன்ற சட்டமன்றச் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வருவதாகவும் Pending சட்டமன்ற உறுப்பினருமான Violet Yong தெரிவித்துள்ளார். 

தேர்தலில் குறிப்பிட்ட கட்சிக்கான ஆதரவை மேம்படுத்தவே இந்த சட்டமன்றத் திருத்தங்களைக் கையாள்வதாக சரவாக் மாநில டி.ஏ.பி சட்டமன்ற உறுப்பினர் Violet Yong குற்றம்சாட்டினார். சரவாக் மாநிலத்தில் எதிர்கட்சியாக இருக்கும் டி.ஏ.பி கட்சியிடம் இந்த சட்டமன்றச் சீர்த்திருங்கள் குறித்த எந்வோர் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படாமல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சரவாக் மாநில டி.ஏ.பி சட்டமன்ற உறுப்பினர் Violet Yong தெரிவித்தார். குறுகிய காலத்தில் இப்படியான சட்டமன்றச் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டால் அது தேர்தலின் போது மக்களை வெகுவாகப் பாதிக்கும் என Pending சட்டமன்ற உறுப்பினருமான Violet Yong தெரிவித்துள்ளார்.


ADUN DAP Sarawak Violet Yong membantah rancangan GPS menambah 17 kerusi DUN baharu. Beliau mendakwa langkah ini bermotifkan kepentingan politik menjelang PRN, dibuat tanpa rundingan dengan pembangkang, dan boleh menjejaskan rakyat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *